மழை
விண்ணிலிருந்து பொழியும் முத்துக்கள் ..
பைந்நிறம் ஊட்டும் ஜால வித்துக்கள்..
ஒளிர் கதிரை எதிர்க்கும் வேகங்கள்..
உன் வரவை நோக்கி மூடும் மேகங்கள்..
மண் வாசம் மணக்க வைத்தாயே..
உணவுக்கு உரமாக தோன்றினாயே..
சிறு பாதங்கள் உன் ஓசைக்கு ஆட..
மறு பாகத்தில் வறுமையும் ஓட..
நீர் புவியில் விழும் தீர்த்தங்களா?
என்றென்றும் மறையா வேதங்களா?